அசோகமித்திரனை நேசித்தல்

அசோகமித்திரனை நேசித்தல்

கணேசகுமாரன்

அசோகமித்திரன் என்ற படைப்பாளியின் படைப்பு குறித்த ஆளுமையின் தொகுப்பாக வந்திருக்கிறது அசோகமித்திரனை வாசித்தல் கட்டுரைத் தொகுப்பு. என்.கல்யாணராமன், அம்ஷன் குமார், பெருமாள் முருகன், ராஜன் குறை, ராமாநுஜம் இவர்களுடன் தொகுப்பாசிரியர் பெருந்தேவியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அசோகமித்திரனின் எழுத்தில் இடம் பெற்றுள்ள உறவுச் சிக்கல், அழகியல், தத்துவார்த்தம், தனி மனித அக்கறை குறித்து இக்கட்டுரைகள் பேசுகின்றன. கூடுதலாக அசோகமித்திரனுக்கும் வாசகருக்கும் இடையிலான வாசிப்பினூடே வாழ்வனுபவத்தை இத்தொகுப்பு கிளறிவிடக் கூடியதாகவும் இருக்கிறது.

குறிப்பாக குடும்பச் சூழல் குறித்த கல்யாண ராமனின் முதல் கட்டுரையில் வெளிப்படும் அசோக

மித்திரனின் எழுத்து அனுபவங்கள் வாசகருக்குள் நாஸ்டால்ஜியா ஞாபகங்களைக் கிளறிவிடக் கூடியவையாக உள்ளன. அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவல் குறித்த அம்ஷன் குமாரின் கட்டுரை, நாவல் உண்டாக்கிய அனுபவத்தினை மட்டும் குறிப்பிடாமல் நாவலையே சுருங்கச் சொல்லியிருப்பது வெகு சிறப்பு. தொடர்ந்து சினிமாத்துறை குறித்த அசோகமித்திரனின் எழுத்தினை வாசிக்கையில் அந்த மகா கலைஞன் மீது மிகப் பெரிய மரியாதை வந்துவிடுகிறது. சினிமா என்னும் மாய உலகின் யதார்த்தங்களை எவ்வாறெல்லாம் தன் எழுத்தில் அசோகமித்திரன் பதிவு செய்திருக்கிறார் என்பதை மிக நுணுக்கமாக அலசி ஆரய்ந்து எழுதியிருக்கிறார் கட்டுரையாளர் அம்ஷன் குமார். சினிமா குறித்த அசோகமித்திரனின் எழுத்து அன்றைய திரைத்துறை குறித்த ஆவணப்பதிவு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிச் செல்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in