தொட்டில்பாலமும்... விநோத வழக்கும்!

தொட்டில்பாலமும்...  விநோத வழக்கும்!

என்.பாரதி

“இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’’ என பராசக்தியில் சிவாஜிகணேசன் வசனம் பேசுவார். அதுபோன்ற வழக்குதான் இது. ஆசியாவிலேயே மிக உயரமானது என்ற பெருமைக்குரியது குமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டில்பாலம். அதன் மறுகரையில் உள்ள பக்கச்சுவரில் சைக்கிள் ஓட்டி சாதிக்க அனுமதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார் மாத்தூரைச் சேர்ந்த ஜோஸ்வா.

கடும் வறட்சியை சமாளிக்க காமராஜரால் கட்டப்பட்ட பாலம் இது. இதற்கான நீர், பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளில் இருந்து கொடையார் கால்வாய் வழியாகக் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான்பாறை, கூட்டுவாயுப்பாறை மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தத் தொட்டில்பாலம் தரைமட்டத்தில் இருந்து 104 அடி உயரத்தில் உள்ளது.

இத்தனை உயரத்தில் இருக்கும் பாலத்தின் நீர்கொண்டு செல்லும் பகுதியின் பக்கச்சுவரில் தான் சைக்கிள் ஓட்ட அனுமதி கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் 50 வயதாகும் ஜோஸ்வா. இதற்கு முன்னர் இவர் மூன்றுமுறை இந்தப் பாலத்தின் கைப்பிடிச்சுவர் மீது நடந்து சாதனை புரிந்தவர். இப்போது கின்னஸ் முயற்சிக்காக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வழக்கைத் தொடுத்துள்ளார். ஒருகாலைப் பொழுதில் மாத்தூர் தொட்டில்பாலத்தில் வைத்து ஜோஸ்வாவைச் சந்தித்தேன். “நான் அடிப்படையில் வாழை விவசாயி. இதுபோக ரப்பர் பால் வடிப்பு தொழிலுக்கும் போவேன். அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன். ஏதாவது சாதிக்கணும்னு சின்ன வயசுலருந்தே ஆசை உண்டு. அதுக்காகத்தான் தொட்டில்பாலத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in