ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் மேகாலயா சிறுவன் சாதனை

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி மேகாலயாவைச் சேர்ந்த நிர்தேஷ் பைசோயாஎன்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

தேஜ்பூர்

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி மேகாலயாவைச் சேர்ந்த நிர்தேஷ் பைசோயாஎன்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

விஜய் மெர்சண்ட் கோப்பைக்கான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி மேகாலயாவைச் சேர்ந்த நிர்தேஷ் பைசோயா என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

மேகாலயா - நாகலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் நிர்தேஷ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஆஃப் ஸ்பின்னரான இவர் இப்போட்டியில் 21 ஓவர்கள் வீசி 51 ரன்களைக் கொடுத்து 10 விக்கெட்களை வீசியுள்ளார். 10 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார். இப்போட்டியில் நாகலாந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. -பிடிஐ

READ SOURCE