கிரெட்டா  நீங்கள் ஒரு முன் மாதிரி: ரோஹித் சர்மா பாராட்டு

பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுத்துவரும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற சிறுமிக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.

பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுத்துவரும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற சிறுமிக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்து வருகிறது.

பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுகளும், உடனடி நடவடிக்கைகளும் அவசியம் என்று பேசினர்.

பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்வீடன் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமியும் பங்கேற்றுப் பேசினார்.

பருவ நிலை மாற்றம் குறித்த கிரெட்டாவின் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கிரெட்டாவை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில்,”பூமியை பாதுகாக்க நமது குழந்தைகளிடம் விடுவது முற்றிலும் அழகற்றது. கிரெட்டா நீங்கள் ஒரு முன் மாதிரி. இதற்கு மேலும் எந்த சாக்கும் கூற முடியாது. வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான பூமியை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் இது மாற்றத்துக்கு நேரம் ” என்று பாராட்டிபதிவிட்டுள்ளார்.

READ SOURCE