5 மிக நீண்ட தூர சிக்ஸர்கள் @ IPL 2025

செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனில் 9 சிக்ஸர்களை 100+ மீட்டருக்கு மேல் பேட்ஸ்மேன்கள் விளாசி உள்ளனர். 

அதில் டாப் 5 நீண்ட தூர சிக்ஸர்களை விளாசியது யார், யார்? என பார்க்கலாம். 

சிஎஸ்கே வீரர் ஜடேஜா, ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 109 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் விளாசி இருந்தார். அது இந்த சீஸனின் நீண்ட தூர சிக்ஸராக அமைந்துள்ளது.

ஹைதராபாத் வீரர் கிளாசன், மும்பை அணிக்கு எதிராக 107 மீட்டர் சிக்ஸரை விளாசினார். 

டெல்லி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸரை விளாசி இருந்தார் கொல்கத்தாவின் ரஸ்ஸல்.

ஹைதராபாத் அணியின் ஓப்பனர் அபிஷேக் சர்மா, பஞ்சாப் அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் விளாசி இருந்தார். 

ஆர்சிபி அணியின் பிலிப் சால்ட், குஜராத் அணிக்கு எதிராக 105 மீட்டர் சிக்ஸரை விளாசினார்.