‘ஆட்ட நாயகன்’ தோனிக்கு புதிய பெருமை!

செய்திப்பிரிவு

லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்திய போட்டியில் தோனி வென்ற ‘ஆட்ட நாயகன்’ விருது சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. 

தோனி 11 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 26 ரன்களும் விளாசி ஆட்ட நாயகனாக தேர்வானார். 6 ஆண்டுக்குப் பிறகு அவர் பெறும் ஆட்ட நாயகன் விருது இது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் ‘ஆட்ட நாயகன் விருது’ வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார்.  ஆம், அவருக்கு வயது 43.
 

வயது மூப்பு காரணமாக தோனியால் அதிக பந்துகளை எதிர்கொண்டு தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள முடியாது என்று விமர்சனங்களுக்கு பதிலடி தந்துள்ளார்.

‘ஃபினிஷர்’ ஃபார்முக்கு திரும்பிய தோனி தனது சிஎஸ்கே அணியை ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு எடுத்துச் செல்வாரா என்பது அடுத்தடுத்த போட்டிகளில் தெரியும்.
 

பேட்டர்கள் நம்பிக்கையுடன் ஷாட்களை மேற்கொள்ளும் வகையிலான ஆடுகளத்தை சேப்பாக்கம் மைதான வடிவமைப்பாளர்கள் அமைக்க வேண்டும் என்கிறார் தோனி. 
 

பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மேம்பட்டு வருவதால், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு மீண்டும் வலுவாகி இருக்கிறது.