செய்திப்பிரிவு
ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார். | படங்கள்: இம்மானுவேல் யோகினி
கேகேஆருக்கு எதிராக திங்கள்கிழமை நடந்த போட்டியில், கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் 23 வயது அஸ்வனி குமார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் அஸ்வனி குமார். 2022-ல் விஜய் ஹசாரே டிராபி, ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினார்.
2024 சீசனில் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடினார். பஞ்சாப் அணியின் பேக்-அப் பவுலராக இருந்தார்.
ஷெர்-இ-பஞ்சாப் டிராபி டி20 தொடரில் வொய்டு யார்க்கர்களை துல்லியமாக வீசி அசத்தினார். அதோடு பந்து வீச்சில் வேரியேஷனும் காட்டி இருந்தார்.
அஸ்வனியின் திறனை கவனித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது. அவரும் பும்ரா இல்லாத குறையை நிவர்த்தி செய்தார்.
“நான் பஞ்சாப் - மொஹாலியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். கடினமாக உழைத்து, கடவுளின் அருளால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்” என்கிறார் அஸ்வனி குமார்.
“எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி என் ஊர் மக்களை பெருமை கொள்ளச் செய்வேன்” என்கிறார் நம்பிக்கை நாயகன் அஸ்வனி குமார்.