‘அதிரடி’ ட்ரம்ப்பின் ‘வீக்’ பாயின்ட் என்னென்ன?

செய்திப்பிரிவு

அதிரடி அறிவிப்புகள், உத்தரவுகளால் தேன்கூட்டைக் கலைப்பது போல பலவற்றையும் ஒரே நேரத்தில் கிளறி விட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

உறங்கிக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளும் அதிர்ச்சியில் இருக்கின்றன. பல தேசங்களும் இந்த சிக்கல்களை தீர்த்துக் கொள்ள ஆயத்தம் ஆகிறார்கள்.

கடுமையான சூழலுக்கு இடையே ஆறுதல் தரக் கூடியதாகவே ட்ரம்ப்பிடம் உள்ள சில ‘வீக்’ பாயின்ட்டுகள் இவை...

அதிரடியாக முடிவுகள் எடுக்கும் அதே வேகத்தில் எடுத்த முடிவுகளை மாற்றும் போக்கும் உடையவர் ட்ரம்ப்.

ட்ரம்ப்புக்கு நெருங்கியவராக அரசியலிலும் இருப்பவர், பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க்.

நிர்வாக உத்தரவுகள் நடப்பிலுள்ள சட்டங்களுக்கு மாறாக இருந்தால், அவற்றை அமெரிக்க நீதிமன்றங்களில் எதிர்க்கலாம்.

பிறப்புக் குடியுரிமை ரத்து உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது முதல் ஆறுதல்.

4 ஆண்டு காலமும் ட்ரம்ப் எல்லா முடிவுகளையும் இப்படியே தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவரது கட்சியினரே ஆதரிக்க மாட்டார்கள்.

உள்நாட்டு பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவை இறக்குமதி தீர்வை மீதான முடிவுகளை மறுஆய்வு செய்யத் தூண்டும்.