நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்!
செய்திப்பிரிவு
மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது.
ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும்.
ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை ஆகியவையும் நல்லது.
பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.
ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சுறுசுறுப்பு அதிகமாகிறது.
திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும்.
ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.