‘ராஜ்மா’ எனும் இதயத்தின் நண்பன்!

செய்திப்பிரிவு

ராஜ்மா (Kidney Beans) என்ற பெயரில் நாம் அறிந்த உணவுப் பண்டம், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் ஒரு வகை பிரட்டல்.

மோட்டாவான பயறு விதையைக் கொண்டு செய்யப்படும் இந்தப் பிரட்டலின் பெயரே, அந்தப் பயற்றுக்கான பெயராகவும் மாறிவிட்டது.

ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச் சத்துகள் அதிகம். இதன் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக் கூடியது.

கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும்.

இதிலுள்ள அதிகப் புரதம், ரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும். அதன்மூலம் உடலின் ரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

ராஜ்மாவில் உள்ள இரும்புச் சத்து உடலுக்கு அதிகச் சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும். இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் கொண்டது.

ராஜ்மாவில் உள்ள ஃபோலேட், இதய நோய்களுக்கு ஒரு காரணியான ‘Homocysteine’ அளவை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.