முருங்கைக் கீரையின் மகிமைகள் என்னென்ன?

செய்திப்பிரிவு

முருங்கையின் பசுமையான இலைகளில் மறைந்திருக்கும் கறுப்பு நிற இரும்புச் சத்து, ஆற்றலை வாரி வழங்கி ரத்த சோகையைத் தடுக்க வல்லவை.

முருங்கைக் கீரையுடன் மஞ்சள், பூண்டு, மிளகு சேர்த்து அவியல் ரகமாகச் சாப்பிட, செரிமான பிரச்சினை தீர்ந்து, உணவின் சாரங்கள் முழுமையாக கிரகிக்கப்படும்.

முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து வேகவைத்து, நீரை இறுத்த பிறகு பொரியலாகச் சமைத்துச் சாப்பிட வாயுப் பிரச்சினைகள் ஏற்படாது.

முருங்கையில் இருக்கும் ‘Quercetin’ எனும் வேதிப்பொருள், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

விட்டமின் ‘ஏ’-வின் சேமிப்புக் கிடங்காகத் திகழும் முருங்கைக் கீரை, பார்வையின் கூர்மையைப் பாதுகாக்கப் பேருதவி புரியும்.

தாய்ப்பால் பெருக்கும் உணவாகவும், பிரசவித்த பெண்களின் பத்திய உணவாகவும் முருங்கைக் கீரை இருக்கிறது.

முருங்கை இலைகளை லேசாகத் தண்ணீரில் சுத்தம் செய்தாலே போதும். மற்ற கீரைகளைப் போல பல முறை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.