‘மெனோபாஸ்’ நிலை: சில தொந்தரவுகளும் தீர்வும்

செய்திப்பிரிவு

மெனோபாஸ் (Menopause) என்பது நோயல்ல. எனினும், சில தொந்தரவுகளும் பாதிப்புகளும் இருந்தால் சிகிச்சை தேவைப்படலாம்.

காஃபின் (Caffeine) அளவைக் கட்டுப்படுத்துவது, சரி விகித உணவுடன் போதுமான விட்டமின்கள் உட்கொள்வது நல்லது.

‘மெனோபாஸ்’ காலத்தில் தாது உப்புகள் நிறைந்த, நார்ச் சத்துள்ள காய்கறி, கீரை, பழங்கள் ஆகியவற்றையும் உட்கொள்ள வேண்டும்.

படுக்கையறையைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்தல், இசையை ரசித்தல், போதுமான உறக்கம் அவசியம்.

புகை - மது தவிர்த்தல், கிரீம்களைப் பயன்படுத்திப் பிறப்புறுப்பு வறட்சியைப் போக்குதல் போன்றவை தேவை.

சிறுநீர்ப் பைப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கவனித்தல், போதுமான அளவு நீர் அருந்துதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

‘மெனோபாஸ்’ நிலையால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டால், மகளிரியல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுச் சிகிச்சை பெறுவது அவசியம்.