நீரிழிவு இருப்பின் ‘அசைவம்’ அச்சம் அவசியமா?

செய்திப்பிரிவு

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் அசைவ உணவை  சாப்பிட சற்று அச்சப்படுவார்கள். கொழுப்பு கூடிவிடுமோ என்று நினைப்பர். அது தவறு.

‘நீரிழிவு நோயாளிகளுக்கு அசைவ உணவு கட்டுப்பாடு தேவையா?’ என்று கேட்டால் ‘தாராளமாக சாப்பிடலாம்’ என்கின்றனர் நிபுணர்கள்.

கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

நீரிழிவு பிரச்சினை இருந்தால், கிழங்கு வகைகளை மட்டும் அடிக்கடி உணவில் சேர்க்காமல் இருப்பது நல்லது.

வெள்ளை அரிசிக்கு மாற்றாக பாசுமதி அரிசி, சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி போன்றவை தினசரி கட்டாயம். மீன், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு, வால் நட் ஆகியவையும் நல்லதே.

நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி அன்றாடம் அவசியம்.

மருத்துவர் கண்காணிப்பில் மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும்.