செய்திப்பிரிவு
பச்சை கேரட்டை விடச் சமைத்த கேரட்டில்தான் பீட்டா கரோட்டின் எனும் கரோட்டினாய்டின் அளவு அதிகமாக இருக்கும்.
இந்த பீட்டா கரோட்டினை நம் உடல் வைட்டமின்-ஏ ஆக மாற்றிக் கொள்கிறது. எலும்பு வளர்ச்சி, பார்வைத் திறன், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
கேரட்டைத் தோலுடன் சேர்த்துச் சமைப்பது அவற்றின் ஆக்ஸிஜனேற்ற ஆற்றலை இரட்டிப்பாக்கும்.
கேரட்டை வெட்டுவதற்கு முன்னர் அதை முழுவதுமாக வேகவைப்பது அவசியம்.
கேரட்டைப் பொரிப்பது அதன் கரோட்டினாய்டின் அளவைக் குறைக்கும். எனவே, பொரிப்பதைத் தவிர்ப்பது நல்லது.