செய்திப்பிரிவு
கர்ப்பக் காலத்தில் சரியான ஊட்டச்சத்தைப் பெறுவது, கருவில் வளரும் குழந்தை சிறப்பாக வளர உதவுவதோடு, தாயின் உடல்நலத்தையும் பாதுகாக்கிறது.
ஃபோலிக் அமிலம்: மூளை, நரம்புக் குழாய்களின் சீரான வளர்ச்சிக்குத் தேவையானது. கர்ப்பக் காலத்தில் ஃபோலிக் அமிலம் முதல் 3 மாதங்களுக்கு முக்கியம்.
கீரை வகைகள், பீட்ரூட், காலிஃபிளவர், புரோக்கோலி, மாதுளை, ஆரஞ்சு, கொய்யா, பச்சைப் பயறு, கொண்டைக் கடலையில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.
அதேபோல் கம்பு, சாமை, தினை, ராகி, முட்டையின் மஞ்சள் கரு, ஆளி விதைகள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.
ஒமேகா-3 கொழுப்புச் சத்து: கிழங்கான், கானாங் கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள், ஆளிவிதை, சியா விதைகள், வால் நட் சாப்பிடலாம்.
புரதம்: தினமும் புரத உணவு அவசியம். சுண்டல், பச்சைப் பயறு, கோழி இறைச்சி, பனீர், சோயா, ராஜ்மா, கொட்டைகள் - விதைகள், மீன், முட்டை சாப்பிடலாம்.
கால்சியம்: கீரைகள் - சமைக்கக்கூடிய இலைகள், பிரண்டை, எள், பால் சார்ந்த உணவுப் பொருள்கள், அருந்தானியம், தயிரை தினசரி உணவில் சேர்க்கலாம்.
இரும்புச் சத்து: கொண்டைக் கடலை, சோயா, கீரைகள் - சமைக்கக்கூடிய இலைகள், தாமரைத் தண்டு, பழங்கள், கம்பு, கேழ்வரகு, ராஜ்மா நல்லது.
கடல் உணவு வகைகள், கோழி இறைச்சி, ஆட்டின் கல்லீரல், எள் விதைகள், பூசணி விதைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.