செய்திப்பிரிவு
சத்தான சிறுதானிய உணவுகளே குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் நன்மை பயக்கின்றன.
குழந்தைகளுக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம் உள்ளிட்டவை சிறுதானிய உணவுகளில் அதிகம் உள்ளன.
புரதம் - தசை வளர்ச்சியை அதிகரிக்கும். துத்தநாகம் - அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவும். மெக்னீசியம் - சோர்வைக் குறைக்கும்.
நார்ச்சத்து-செரிமானத்தை மேம்படுத்தும்; கால்சியம் - எலும்புகளை வலுவாக்கும். இரும்பு - ஹீமோகுளோபின் உருவாக்கத்தைப் பெருக்கும்.
சிறுதானியத்தில் 15-20 சதவீதம் வரை நார்ச்சத்து உள்ளதால், அது குழந்தைகளின் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்வதற்கு சிறுதானிய உணவு பெரிதும் உதவும்.