The Law of Harvest: வெற்றிக்கு வித்திடும் 7 உத்திகள்!

செய்திப்பிரிவு

வேளாண்மையில் மட்டுமின்றி வேலை - தொழிலில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் பொருந்தக் கூடியதுதான் ‘THE LAW OF HARVEST’.

‘நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்ய இயலும்’ என்ற அடிப்படையில் அவசியம் அறிய வேண்டிய 7 உத்திகள் இவை...

1) நாம் விதைத்ததையே, அறுவடையாகப் பெற இயலும் (ORIGINALITY): சரியானதைச் செய்து, சரியானதை எதிர்பாருங்கள் என்கிறது இந்த விதி.

2) நாம் விதைக்கும் விதைகளின் தன்மையைப் பொறுத்தே, அதன் அறுவடையும் இருக்கும் (QUALITY & CHARACTER): சிந்தனை, அணுகுமுறையை இது குறிக்கிறது.

3) விதைத்த காலத்தைவிட, வேறு காலத்தில்தான் அறுவடை கிடைக்கும் (TIME & PERIOD): அதாவது, ‘காலம்’ கருதி காரியங்களில் ஈடுபடுவது முக்கியம்.

4) நாம் விதைப்பதைவிட, அதிகமாகவே அறுவடை பெறுகிறோம் (PROFIT): வேலையோ, தொழிலோ லாபம், வருவாய் என்பது மிகவும் முக்கியம்.

5) விதைப்பதற்கேற்பதான், அறுவடையின் அளவும் இருக்கும் (QUANTITY): உங்கள் திறனுக்கும் உழைப்புக்கும் ஏற்பவே ‘ரிசல்ட்’ இருக்கும் என்பதை மறவாதீர்.

6) நல்லவை விளைய, கடுமையாக உழைத்து, பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்; ஆனால் களைகளோ விரைவில் தாமாகவே முளைக்கும் (HARD WORK & PATIENCE).

7) கடந்த வருட அறுவடையை நாம் மாற்ற முடியாது; ஆனால் இந்த வருட அறுவடையை மாற்ற முடியும் (PRODUCT OUTPUT): இழப்பை எண்ணி வருந்தாமல் உழைப்பீர்.