செய்திப்பிரிவு
பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படலாம். பொதுவாக, நமது தூக்கத்தைத் தூண்டும் 10 கட்டளைகள் இவை...
1. இரவில் படுக்கச்செல்லும் முன்பு வெளியில் சிறிது நேரம் காலார நடந்துசெல்லுங்கள்.
2. பகலில் வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
3. இரவிலும் ஒருமுறை குளிக்கலாம்.
4. இரவில் எளிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
5. இரவில் காபி, தேநீர், மது போன்றவற்றை அருந்த வேண்டாம்.
6. புகைபிடிக்காதீர்கள்.
7. இரவில் நீண்ட நேரம் கைபேசியைப் பயன்படுத்தாதீர்கள்.
8. தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலும் அதிக நேரம் உட்காராதீர்கள்.
9. வீட்டில் நல்ல தூக்கச் சூழலை உருவாக்குங்கள்.
10. பகலில் தூங்க வேண்டாம்.