செய்திப்பிரிவு
நெஞ்செரிச்சலுக்கு காரணமான உணவைத் தவிர்க்க வேண்டும். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவுகள் கூடாது.
ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.
கவலையாக, கோபமாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அதுபோல் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம். மோரும் இளநீரும் மிகவும் நல்லது.
காபி, தேநீர் அடிக்கடி வேண்டாம். செயற்கைப் பானங்கள், குளிர்பானங்கள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். இடது பக்கமாகப் புரண்டு படுப்பதுதான் சிறந்தது.
உடல்பருமன் இருந்தால் அதைக் குறைக்க வழி பாருங்கள். அப்போதுதான் நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும்.