உடல் களைப்பு கலைய உதவும் உணவு வகைகள்!

செய்திப்பிரிவு

நம் உடலில் இரும்புச் சத்து, விட்டமின் - பி12, விட்டமின்- டி, போலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.

உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைக்காதபோது களைப்பு ஏற்படும். களைப்பைப் போக்க உதவும் உணவுக் குறிப்புகள் இதோ...

முழுதானிய உணவும், சிறுதானிய உணவும் நல்லது. புரதம் நிறைந்த காளான், இறைச்சி, ஈரல், பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் இரண்டு வகைக் காய்கறிகளையும் உங்களுக்குப் பிடித்த பழங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பட்டாணி, அவரை, துவரை, சுண்டல், முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, முந்திரிப் பருப்பு போன்ற கொட்டை வகைகளும் உடல் களைப்பு போக்க உதவும்.