செய்திப்பிரிவு
பின்னோக்கி நடக்கும்போது விரல்களை முதலிலும், குதிகாலை அடுத்தும் தரையில் வைப்போம். இது முழங்கால் அழுத்தத்தை குறைக்கும்,
பின்னோக்கி நடப்பதால் தொடையில் உள்ள 4 தலைத் தசைகள், பின் தொடைத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், பிட்டத் தசைகள் ஆகியவை வலுப் பெறும்.
உடலைப் பின்னோக்கித் தள்ள இடுப்புக்குக் கீழே உள்ள தசைகள் அதிகம் செயல்படுகின்றன. இதனால், கீழ் இடுப்பு வலி குறைகிறது.
பின்னோக்கி நடப்பதால், முன்னோக்கி நடப்பதைவிட 40% அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாக ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ கூறுகிறது.
பின்னோக்கி நடக்கும்போது ஓர் எச்சரிக்கை உணர்வு தேவைப்படுவதால், மூளையின் கவனம், ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் செயல்திறன் கூடுகிறது.
நடைப்பயிற்சியில் பின்னோக்கி நடப்பதன் விளைவாக, இதயத்தின் செயல்பாடும் நுரையீரலின் திறனும் அதிகரிக்கின்றன.
கொஞ்சம் தவறினாலும் விழுந்துவிடுவோம் என்பதால் நன்கு பழகிய இடங்களில் தான் பின்னோக்கி நடை பயில வேண்டும்.
பின்னோக்கி நடக்கும்போது, நடையை மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகவே வேகத்தைக் கூட்ட வேண்டும்.
நடக்கும் தூரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கூட்ட வேண்டும். சரியான காலணிகளை அணிந்துகொள்ள வேண்டும்.