செய்திப்பிரிவு
நம் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும். உடல் எடை குறைவுக்கு உணவுதான் காரணம் எனில், புரதச் சத்துதான் கைகொடுக்கும்.
பால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம்.
நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, மொச்சை, சுண்டல், முளைகட்டிய பயறுகளில் புரதம் அதிகம்.
அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது. சைவ உணவுகளில் உளுந்தம் பருப்பில் புரதம் மிக அதிகம்.
தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம்.
மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரிப் பருப்பு, அவித்த வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறுகள் சாப்பிடுவது நல்லது.
தினசரி உணவில் கீரைகளையும் பழங்களையும் காய்கறிகளையும் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் ஆகாது. தினமும் அரை மணி நேரம் உடலில் வெயில் படவேண்டும். சரியான உறக்கம் முக்கியம்.