செய்திப்பிரிவு
உங்கள் குடும்ப மருத்துவர் ‘பொதுநல மருத்துவர்’ ஆக இருக்க வேண்டும். மருத்துவத்தில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் குடும்ப வரலாறும் அவருக்குத் தெரிய வேண்டும்.
உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும்.
உங்கள் பிரச்சினைகளுக்காக எடுக்கும் பரிசோதனைகள் குறித்தும், அளிக்கும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் தருபவராக இருக்க வேண்டும்.
முக்கியமாக, உங்கள் குடும்ப மருத்துவர் கேட்கும் மருத்துவக் கட்டணம், உங்கள் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.