செய்திப்பிரிவு
காபி, தேநீர், பிளாக் டீ-யை குறைத்துக்கொள்ள வேண்டும். கோக் பானங்கள், மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகியவை ஆகவே ஆகாது.
உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரை ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம்.
கேழ்வரகு, கீரைகள், மீன், இறால், நண்டு, வெள்ளைக் கரு, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. தினமும் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும்.
இளநீர், நீர்மோர், பழச்சாறுகள் போன்ற திரவ உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
தேவையில்லாமல் வெயிலில் அலையாதீர்கள். இனப்பெருக்க வெளி உறுப்புகளைத் தினமும் நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். மது அருந்தாதீர்கள்.