நீரிழிவு நோயை கட்டுப்படுத்த 8 ‘அவசியம்’கள்!

செய்திப்பிரிவு

மாதம் ஒருமுறை உணவுக்கு முன்னும் பின்னும் ரத்தப் பரிசோதனை, 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை மேற்கொள்வது ‘அவசியம்’.

6 மாதங்களுக்கு ஒரு முறை ஈசிஜி, நெஞ்சு எக்ஸ்ரே மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது ‘அவசியம்’. 

சுய மருத்துவம் கூடவே கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்துவது ‘அவசியம்’.

அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் தவறாமல் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது  ‘அவசியம்’.

மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிப்பது ‘அவசியம்’. தினசரி 2 துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிடுவது ‘அவசியம்’.

பழங்களில் முக்கனியைத் தவிர்த்துவிட்டு கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்ப்பது ‘அவசியம்’.

கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்ப்பது ‘அவசியம்’. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பாலக் கீரையைத் தவிர்ப்பது ‘அவசியம்’.

சிறு தானியங்கள் ‘அவசியம்’. ஆனால் கூழ், களியை தவிர்க்கலாம். உணவில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும், சாதம் குறைவாகவும் இருப்பது ‘அவசியம்’.