செய்திப்பிரிவு
இன்று சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு எதிர்பார்ப்புகள் குறித்த சிந்தனையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.
காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்கும்போது விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வழக்கங்களுக்கான நேரம் கணிசமாகக் குறைகிறது.
ஊடகப் பொழுதுபோக்குக்கு அதீத நேரம் செலவழிப்பது, சமூகக் குழுக்களுடன் பழகும் நேரத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் அவர்கள் சமூகத்திடமிருந்து அந்நியமாகின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்களின் ‘ஸ்க்ரீன் டைம்’ என்பதில் பெற்றோர் இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாணவர்கள் காட்சி ஊடகத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய புறம்தள்ள வேண்டிய விஷயங்கள் எவையெவை என்பதைப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.
தேவை இருப்பின் அவர்கள் காட்சி ஊடங்களுக்குச் செலவிடும் நேரத்தை, அதில் இருந்து உள்வாங்கிக் கொண்டதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவிடச் சொல்லலாம்.
பின்பு, அதைப் பற்றிய ஆரோக்கியமான கலந்துரையாடல் மூலம் நன்மைகளை மட்டும் பழக்கமாக்கிக் கொள்ள கற்றுத் தரலாம். | தொகுப்பு: டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்