வேலைப்பளு தூண்டும் பதற்றம் - அலர்ட் குறிப்புகள்

செய்திப்பிரிவு

இனம் புரியாத பயம், பதற்றம், கோபம், இதயம் படபடவென்று அடிப்பது, தலைவலி, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்றவை இருக்கிறதா? கவனம் GAD-ஆக இருக்கலாம். 
 

இதனை ‘Generalised Anxiety Disorder (GAD)’ என்று மருத்துவரீதியாகக் குறிப்பிடுகிறோம். இது ஒரு வகையான மனப்பதற்றம். 

இந்தப் பாதிப்பின்போது தனக்கு அல்லது தன்னுடைய குடும்பத்தினருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படுமோ என்கிற பதற்ற மனநிலையை ஒருவர் எதிர்கொள்வர்.

எந்தவொரு புறச்சூழ்நிலையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் பெரும்பாலான நேரம் இந்தப் பதற்ற மனநிலை ஒருவரைத் தாக்கும். 
 

தீர்வு: பணிச்சூழல், குடும்பச்சூழல், பொருளாதாரப் பின்னணி போன்று பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும்.
 

பதற்றத்தைப் எப்படிக் கையாள வேண்டும் என்கிற ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்பட்டால் இதில் இருந்து மீண்டு வரலாம்.

மேலும், பதற்றத்தைத் தனிப்பதற்கான ஆலோசனை, உடற்பயிற்சி, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றால் இதிலிருந்து சுலபமாக மீண்டுவரலாம். | தொகுப்பு: டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்