அரைக் கீரை, அகத்திக் கீரை - நன்மைகள் என்னென்ன?

செய்திப்பிரிவு

அரைக் கீரையில் கால்சியமும் ‘வைட்டமின் சி’யும் அதிகம். பீட்டா கரோடின், நார்ச்சத்து ஓரளவுக்கு உள்ளது. இரும்புச் சத்து மிக அதிகம். 

உணவுச் செரிமானத்துக்கும் நல்லது. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்ற உணவுதான் இந்த அரைக்கீரை.

புரதம், கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் பருமன், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் அரைக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.

அகத்திக் கீரையில் கால்சியம் மிகுதியாக உள்ளது. இதனால், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் வளரும் பருவத்தினருக்கு நல்லதொரு உணவு.

கீரைகளில் அதிக ஆற்றல் தரக் கூடிய அகத்திக் கீரையில், பல மருத்துவக் குணங்கள் உள்ளன. புரதமும் கார்போஹைட்ரேட்டும் ஓரளவுக்கு உள்ளன.

பாஸ்பரஸ் அதிகம் என்பதால், பல் நலன் காக்க உதவுகிறது அகத்திக் கீரை. வைட்டமின் ஏ சத்தும், இரும்புச் சத்தும் இதில் தேவைக்கு உள்ளன.

அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. குறிப்பாக, ரத்தசோகை நோயாளிகளுக்கு இந்தக் கீரை மிகவும் உகந்தது.