கூந்தல் ஆரோக்கியத்துக்கு உகந்த 5 உணவுகள்

செய்திப்பிரிவு

முருங்கைக் கீரை: முருங்கை இலையில் பாக்டீரியாவையும் பூஞ்சையையும் எதிர்க்கும் பண்புகள் உள்ளன. முடி நரைப்பதைத் தடுக்கும்.

வெந்தயம்: வெந்தயத்தில் புரதம், இரும்பு, கோலின், பி விட்டமின் இருப்பதால் முடி கொட்டுவதைத் தடுத்து முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.

கொட்டைகள், விதைகள்: பாதாம், வால்நட், வேர்க்கடலை, பூசணி விதை, சூரியகாந்தி விதை, எள் போன்றவற்றில் உள்ள சத்துக்கள் புதிய முடி உருவாவதை தூண்டுகிறது.

முட்டை: முட்டையில் முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அவை முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன. சேதமடைந்த முடிகளை குணப்படுத்தும்.
 

கறிவேப்பிலை: இதில் இரும்புச் சத்து, விட்டமின் பி, சி, பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளதால் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. | தொகுப்பு: எஸ்.சினேகா