செய்திப்பிரிவு
இன்றைய அவசர உலகில் முடி உதிர்தல், பொடுகு, முடிப்பிளவு போன்ற பிரச்சினைகளை மக்கள் அதிக அளவில் சந்திக்கின்றனர்.
வலிமையான கூந்தலுக்கு பின்பற்ற வேண்டிய சில எளிய பராமரிப்பு முறைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
விட்டமின்களின் குறைபாடு கூந்தலைப் பாதிக்கும். விட்டமின் ஏ, டி, இ, துத்தநாகம், புரதம் ஆகியவை தலைமுடி ஆரோக்கியத்திற்கு அவசியம்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்குக் குளிக்க வேண்டும். சல்ஃபேட், பாரபென் இல்லாத ஷாம்புகளைத் தேர்வுசெய்வது முக்கியம்.
பளபளப்பை அதிகரிக்கக்கூடிய வேதிப் பொருள்கள் குறைவாக உள்ள ஷாம்புகள், கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
குளித்த பின் முடியை அழுத்தித் துடைக்காமல் லேசாகத் துடைக்க வேண்டும். அதிக அளவு அழுத்தத்தைத் தருவது முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்யும்.
வாரம் ஒரு முறை தலைக்கு மசாஜ் செய்வதால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு முடி வளர உதவும்.
ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற கருவிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
அதிக வெப்பத்தைத் தரும் கருவிகளைப் பயன்படுத்துவது முடியையும் தலையையும் சேதப்படுத்தும்.
உடல் ஆரோக்கியம் - தலைமுடி பராமரிப்புக்குத் தினசரி 6 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வைச் சீராக்குகிறது. தலைமுடி வளர்ச்சியை உறுதிசெய்கிறது. | தொகுப்பு: எஸ்.சினேகா