செய்திப்பிரிவு
வெந்தயக் கீரையில் வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்’ மிக அதிகமாக இருக்கிறது. இரும்புச் சத்தும் நார்ச் சத்தும் ஓரளவு இருக்கின்றன.
வெந்தயக் கீரையில் கால்சியம், பீட்டா கரோடின் நிறைய இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை தேவைக்கு உள்ளன.
பொட்டாசியம் குறைந்த அளவில் உள்ள வெந்தயக் கீரை, பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக்கிறது.
இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும், பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் வெந்தயக் கீரை ஒரு சிறந்த உணவு.
மூளை நரம்புகளுக்கு நன்மை பயக்கும் வெந்தயக் கீரை, சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றது என்பதும் மிக முக்கிய அம்சம்.