செய்திப்பிரிவு
முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோடின் ஆகியவை அதிகமாக உள்ளன.
பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்களும் முருங்கைக் கீரையில் தேவைக்கு உள்ளன.
முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள், கண்களுக்கு மிக நல்லது. அத்துடன், ரத்தசோகையைப் போக்க உதவும் தன்மையும் முருங்கைக் கீரைக்கு உண்டு.
எலும்பு வளர்ச்சிக்குத் துணை செய்யும் முருங்கைக் கீரை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
இரைப்பைப் புண்ணைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட முருங்கைக் கீரையில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.
இதய நோயாளிகள் தாராளமாக சாப்பட வேண்டிய முக்கிய உணவாகவே திகழ்கிறது முருங்கைக் கீரை.