பசலை - ‘கீரைகளின் அரசன்’ ஏன்?

செய்திப்பிரிவு

பசலைக் கீரையே ‘கீரைகளின் அரசன்’ என அழைக்கப்படுகிறது. காரணம், குறைந்த அளவில் இருந்தாலும் பல சத்துகளைக் கொண்ட கீரை இது.

வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், அமினோஅமிலம் எனப் பல சத்துகள் நிறைந்ததுதான் பசலைக் கீரை.

பசலைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவோருக்கு வாய்ப் புண் வராது. அதேபோல், இரைப்பைப் புண்ணும் வராது.

உடலுக்கு வலிமை தருவதுடன், நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் வல்லமையும் பசலைக் கீரைக்கு உண்டு.

பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிடுவோரை சிறுநீரகப் பிரச்சினைகள் அண்டுவதற்கு அஞ்சும் என்பதும் கவனிக்கத்தக்கது.

பாலூட்டும் பெண்களுக்கு அற்புத உணவாகவே கருதப்படுகிறது ‘பசலைக் கீரை’.