செய்திப்பிரிவு
ஆசனவாயில் தொற்றுள்ள மூலநோய் இருக்குமானால் அல்லது கண்ணாடியை வைத்துக் கீறியது போல் வெடிப்புகள் (Anal Fissure) இருந்தால் வலி ஏற்படக்கூடும்.
ஆசனவாய் சுண்டுவிரல்கூட நுழைய முடியாதபடி சுருங்கி இருக்கும். அப்போதும் இந்த மாதிரி கடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும்.
மலச்சிக்கல்தான் இதற்கு முதல் காரணம். அதிக நேரம் அமர்ந்தே இருப்பது அடுத்த காரணம். இந்த இரண்டையும் தவிருங்கள்.
மருத்துவர் கொடுத்திருக்கும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மருத்துவர் பரிந்துரைப்படி பொருத்தமான நுண்ணுயிர்க் கொல்லி மருந்தையும் அமீபா எதிர்ப்பு மருந்து ஒன்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
‘சிட்ஸ் பாத்’ (Sitz Bath) எனும் முறையில் ஆசன வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.
நிறையத் தண்ணீர் குடியுங்கள். கீரை, காய்கறி, பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். துரித உணவையும் நொறுக்குத் தீனிகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
நீண்ட தூரப் பயணங்களைத் தவிருங்கள். வலி தொடர்கிறது என்றால், மருத்துவர் யோசனைப்படி வெடிப்புள்ள ஆசனவாயைச் சற்றே விரித்துவிட்டால் நிவாரணம் கிடைக்கும். | தொகுப்பு: கு.கணேசன்