செய்திப்பிரிவு
அறிவியல் என்பதை ஒரு பாடமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. அறிவியல் சிந்தனையை ஒருவர் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சக்கரம், மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, திறன்பேசி எனப் பல கண்டறிதல்கள் அறிவியல் - தொழில் நுட்பத்தின் இணைப்பால் நிகழ்ந்தவை.
கண்டறிதல்கள் ஒருவரின் நேரம், பணத்தை மிச்சப்படுத்தும், பூமிக்கும் விண்வெளிக்குமான தொடர்பை ஏற்படுத்தும் மனிதனுக்குத் தேவையான வசதியை உண்டாக்கும்.
ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகத் தொழில்நுட்பம் பயன்படுவதுபோல அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பது கவலைக்குரியது மட்டுமன்றி, விவாதிக்கப்பட வேண்டியதும்கூட.
இயற்கைக்குச் சவால்விடும் தொழில் நுட்பமும், போர் போன்று அழிவுக்கான தளங்களில் அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதும் ஆபத்தானது.
எந்தவொரு தொழில்நுட்பத்தையும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால், மனிதனின் இயல்பான கற்பனைத் திறனுக்கும், ஆக்கத்திறனுக்கும் பாதிப்பு ஏற்படும்.
திறன்பேசி, கணினி போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.
அறிவியல்ரீதியான பதிலை நீங்கள் தேட முற்படும்போது முதலில் ‘யோசனை’ உதிக்கும். அதைச் செயல்படுத்திப் பார்க்கலாம். அது ஒரு கண்டறிதலாகவும் உருப்பெறலாம்.
மனித குலத்துக்குத் தேவையான ஆக்கபூர்வமான கண்டறிதல்களுக்கு அறிவியலே அடிப்படை. இதனால் வாழ்நாள் முழுவதும் கற்றால் நம் அறிவு மேம்படும்! | தொகுப்பு: ராகா