செய்திப்பிரிவு
தேர்வுக்குத் தயாராகும் பயணத்தில் கற்கும் பண்புகள் தனிநபராக ஒருவர் முன்னேற்றம் அடையவும், எந்தத் துறையிலும் சாதிக்கத் தூண்டும் தன்னம்பிக்கையைப் பெறவும் முடியும்.
பகுப்பாய்வு மனப்பான்மை: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர் எதையும் பகுப்பாய்வு செய்யும் மனப்பான்மையையும் ஆராயும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
விடாமுயற்சி: இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான உறுதியான சிந்தனையையும், தோல்விகளைக் கண்டு பின்வாங்காத விடா முயற்சி மனநிலையையும் வளர்த்துக்கொள்ளலாம்.
நேர மேலாண்மை: போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது நேர மேலாண்மை முக்கியம். திட்டமிட்டு, செய்து முடிப்பது போட்டித் தேர்வர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு.
நிர்வாகச் செயல்முறை: பொது நிர்வாகத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தினால் நிர்வாகச் செயல்முறை குறித்த புரிதல் தேர்வர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.
தலைமைப் பண்பு: போட்டித் தேர்வில் வெற்றி தோல்விகளை எதிர் கொள்ளல், இலக்கிலிருந்து பின்வாங்காமல் இருத்தல் போன்றவை தலைமைப் பண்புகளை நிச்சயம் செம்மைப்படுத்தும்.
மொழிப் புலமை: தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருப்பது அவசியம். தவிர பல்வேறு மொழிகளைக் கூடுதலாகத் தெரிந்து வைத்திருப்பது பலம்.
பேச்சுத் திறன்: சிக்கலான யோசனைகளைத் தெளிவான நடையில் வாய்மொழியாகவோ எழுதுப்பூர்வமாகவோ வெளிப்படுத்துவது முக்கியப் பண்பாகும்.
சர்வதேசப் புரிதல்: உள்நாடு தொடர்பான தகவல் மட்டுமன்றிப் போர், எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது தேர்வில் வெற்றிபெற உதவியாக இருக்கும்.
தீர்வு காணுதல்: எந்தவொரு முடிவையும் அவசர நிலையில் எடுக்காமல், ஆராய்ந்து சரியான முடிவைச்செயல்படுத்தப் பழகிக் கொள்ளலாம். | தகவல்கள்: ஆதலையூர் சூரியகுமார்