கர்ப்பிணிகள் கவனத்துக்கு... ஹைபோ தைராய்டிசம்!

செய்திப்பிரிவு

கர்ப்பக் காலத்தில் ‘ஹைபோ தைராய்டிசம்’ எனப்படும் தைராய்டு குறை பாதிப்பினால் பெரும்பாலான கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். 

கர்ப்பிணிகளுக்கு ஹைபோ தைராய்டிசம் இருந்து, அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் அது கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும்.

உணவில் உள்ள அயோடின் குறைவதால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படும். உடலில் உருவாகும் எதிர்ப் புரதத்தினால் ஏற்படுகிற தன்னுடல் தாக்கு நோயினால் ஏற்படலாம்.

பாதிப்புகள்: கருச்சிதைவு, பிரசவத்திற்குப் பின் அதிக ரத்தப்போக்கு, தசை வலி, பலவீனம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். ரத்தச்சோகை, நஞ்சுக்கொடி பிறழ்வுகள் ஏற்படலாம்.

மூளை வளர்ச்சி குன்றுவதால் அறிவுத்திறன் குறைவுள்ள குழந்தைகளாக இவர்கள் பிறப்பார்கள். பிறவியிலேயே ஹைபோதைராய்டிசம் கொண்ட குழந்தைகளாகப் பிறப்பார்கள்.

சிகிச்சை: ஆரம்பநிலை ஹைபோ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு டி.எஸ்.ஹெச் ஹார்மோனின் அளவு அதிகரித்து, தைராய்டு பெராக்ஸிடேஸ் இருந்தால் சிகிச்சை வேண்டும்.

ஒவ்வொரு கர்ப்பிணியும் தினமும் 250 மிகி அளவு அயோடின் சத்து தங்களுக்குக் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

பிரசவத்திற்குப் பிறகும் தாய்மார்களுக்கு தைராய்டு பரிசோதனைகளை ஆறு வாரத்தில் செய்வதுடன் குழந்தையின் உடல் நிலையையும் கண்காணிக்க வேண்டும். | கைடன்ஸ்: டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்