பறவைகளின் அலகுகள் பலவிதம்!

செய்திப்பிரிவு

பறவை எந்தச் சூழ்நிலையில் வாழ்கிறது, எந்தவிதமான உணவைச் சாப்பிடுகிறது என்பதைப் பொறுத்து பறவைகளின் அலகுகள் வேறுபடுகின்றன.

சிட்டுக்குருவி போன்ற விதை உண்ணும் பறவைகள் குறுகிய கூம்பு வடிவ அலகுகளைக் கொண்டுள்ளன. அவை விதைகளை உடைத்துச் சாப்பிடுகின்றன.
 

மரங்கொத்தி போன்ற பறவைகள் கூர்மையான அலகுகளைக் கொண்டுள்ளன. அவை மரங்களில் ஓட்டை இடுவதற்கும், பூச்சிகளை உண்பதற்கும் ஏதுவாக இருக்கின்றன. 

கொட்டையை உடைத்து, பருப்பு உண்ணும் கிளிகள் வலிமையான வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன.

தேன் குடிப்பதற்காக ஓசனிச் சிட்டுகள் நீண்ட மெல்லிய அலகுகளைக் கொண்டுள்ளன. 
 

மீன்பிடிக்கும் பறவைகள் என ஒவ்வொரு வகைப் பறவையும் அதன் உணவுமுறைக்கு ஏற்ப, பிரத்யேகமான அலகைக் கொண்டுள்ளது.
 

மனிதர்களின் தாடை அமைப்பைப் போலப் பறவை அலகின் மேல்பகுதி அசையாததாகவும் கீழ்ப்பகுதி அசையக்கூடியதாகவும் இருக்கிறது. | தொகுப்பு: பெ.சசிக்குமார்