காது குடையும் ‘பட்ஸ்’ ஆபத்தா? - அலர்ட் குறிப்புகள்

செய்திப்பிரிவு

காதுக்குள் குரும்பி இருக்கும்போது, அதில் தண்ணீர் இறங்கிவிட்டால் குரும்பி உப்பிவிடும். இது காது சவ்வை அடைத்துக்கொள்ளும். இதனால் காது சரியாகக் கேட்காது. 

குரும்பியை அகற்றிவிட்டால் காது அடைப்பு சரியாகிவிடும். குரும்பியை ‘பட்ஸ்’ கொண்டு அகற்றுவதைவிட மருத்துவர் உதவியுடன் அகற்றுவதுதான் சரி.

பல சந்தர்ப்பங்களில் ஊக்கு, ‘ஹேர்- பின்’, தீக்குச்சி, பேனா பட்ஸ் என்று கையில் கிடைப்பதை காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் பலரிடம் உண்டு. இது ஆபத்தானது.

பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும்.

பட்ஸால் பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்குத் தள்ளிவிடுவதுதான் நடக்கும்.

தவறுதலாகச் செவிப்பறையில் ‘பட்ஸ்’ பட்டு கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்படலாம்.

இயன்றவரை பட்ஸைக் கொண்டு காது குடைவதைத் தவிர்ப்பதே நல்லது. மாறாக, மருத்துவர் உதவியுடன் காது குரும்பியை அகற்றுவதே நல்லது.