செய்திப்பிரிவு
சரியான வாழ்க்கை முறை பயனாளியின் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் அச்சாணி. அச்சாணி கழன்றுவிட்டால் சக்கரம் சுழலாது.
வாழ்க்கை முறையைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றால் கொஞ்சமே அதிகரித்த கொலஸ்டிரால்கூடக் குறைவதற்கு அடம்பிடிக்கும். அப்போது மாத்திரை தேவை.
ஆக, கொலஸ்டிரால் மாத்திரை அவசியமா, இல்லையா என்பதை தீர்மானிப்பவை கெட்ட கொலஸ்டிரால் எண்கள் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும்தான்.
வழக்கத்தில், வயது ஆக ஆக கொலஸ்டிரால் பிரச்சினை செய்யும் என்பது பொதுவான விதி. ஆனாலும், இது எல்லாருக்கும் பொருந்துவதில்லை.
வயதான காலத்தில் கொலஸ்டிரால் பிரச்சினை இல்லாமல் இருக்க ஆரோக்கியமிக்க வாழ்க்கை முறையே காரணம். கொலஸ்டிரால் மாத்திரை யாருக்கு அவசியம்?
குடும்ப வரலாற்றில் தீவிர மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கு கொலஸ்டிரால் காரணமாக இளம் வயதிலேயே மாரடைப்பு பிரச்சினை ஏற்படும் ஆபத்து உண்டு.
மரபணுக் குறைபாடு உள்ளவர்களுக்கு கல்லீரலில் கெட்ட கொலஸ்டிராலை அப்புறப்படுத்தும் மரபணு பிறவியிலேயே இல்லாமல் போய்விட்டது.
அப்படி அப்புறப்படுத்தும் வேலையை இனிமேல் ‘ஸ்டாடின்’ மாத்திரைதான் இவர்களுக்குச் செய்ய முடியும். இவர்கள் இந்த மாத்திரை கட்டாயம்.
ஆஞ்சைனா நெஞ்சு வலி வந்தவர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்போர் கட்டாயம் கொலஸ்டிரால் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொலஸ்டிரால் மாத்திரை அவசியமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது உணவுப் பழக்கம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் போன்ற மோசமான அம்சங்களும்தான்.
கொலஸ்டிராலைக் குறைக்க நவீன மருத்துவத்தில் ‘ரிபேதா’ (Repatha) என்னும் ஊசி மருந்து, ‘இன்கிளிசிரான்’ (Inclisiran) என்னும் பெயரில் மற்றோர் ஊசி மருந்தும் வந்திருக்கிறது.
கொலஸ்டிரால் மாத்திரைகளைச் சாப்பிட்டும் அதன் அளவு குறையாதவர்களுக்கும், கொலஸ்டிரால் மாத்திரை ஒத்துக் கொள்ளாதவர்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.
விலை அதிகம். ஆனால், இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் அற்புதமான மருந்துகள் இவை. | தகவல்:கு.கணேசன்