சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கலாமா? - ஒரு கைடன்ஸ்

செய்திப்பிரிவு

சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கும் முன்பு மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். காலையில் எடுத்துக்கொள்ளும் இன்சுலின் அளவு, உணவின் அளவை கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டும்.

விரதம் இருந்து இன்சுலின் ஊசி மருந்தையும் எடுத்துக் கொண்டால், ரத்தச் சர்க்கரை குறைந்துவிடும். ஆகவே, விரதம் இருப்போர் இன்சுலின் எடுக்கும் நேரத்தை மாற்றுவது நல்லது.
 

இரைப்பையில் புண்ணும் செரிமானக் கோளாறுகளும் இல்லை எனில், விரதம் இருப்பதில் தவறில்லை. தினமும் ஒரு வேளை விரதம் இருப்பதுதான் சரி. 

காலை உணவைச் சாப்பிடாமல் மதிய உணவில் தொடங்கி இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது சிறந்த முறை. 
 

காலை உணவு தேவையெனில் காலை, மதியம் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் சிறிய அளவில் ஆரோக்கியத் தீனி சாப்பிட்டு முடித்துக் கொள்ள வேண்டும்.
 

விரதம் தவிர்த்து அடுத்ததாக இரு வேளை சாப்பிடும்போது அதிக கவனம் தேவை. உணவின் அளவு முக்கியம். ஊட்டச் சத்துகளை குறைத்துவிடக் கூடாது.

ஓட்டல்களில் சாப்பிட்டால் எப்படியும் கலோரிகள் கூடும். விரதம் இருந்தும் பலன் கிடைக்காது. விரதம் இருக்கும் நேரத்தில் பால், பழம் போன்றவை கூடாது.

தேவையெனில் உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு, நெல்லிச் சாறு, கிரீன் டீ (அ) காய்கறி சூப் அருந்தலாம். | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்