உலகின் டாப் 52-ல் அசாம் 4-ம் இடம் எப்படி?

செய்திப்பிரிவு

‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள 2025-ல் பார்க்க வேண்டிய டாப் 52 இடங்கள் பட்டியலில் அசாம் 4-ம் இடம் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில், பிரிட்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜேன் ஆஸ்டென்’ஸ் இங்கிலாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

ஈக்குவடாரின் கலபகோஸ் தீவுகள் 2-ம் இடம், நியூயார்க் சிட்டி அருங்காட்சியகம் 3-ம் இடம், தாய்லாந்தின் ஒயிட் லோட்டஸ் 5-ம் இடம் பிடித்துள்ளன.

2025-ல் உலக அளவில் சுற்றிப் பார்க்க வேண்டிய டாப் 52 இடங்கள் பட்டியலில் அசாம் 4-ம் இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

அசாம் மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வங்கதேசம், மியான்மர் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள மலைப் பிரதேசமான அசாம், வடகிழக்கு இந்தியாவின் நுழைவு வாயில்.

இயற்கை எழில் கொஞ்சும் அழகு, மேன்மையான கலாச்சாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது அசாம்.

‘பச்சை தேயிலை தோட்டங்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தின் நிலம்’ என நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டி உள்ளது.

உலகப் புகழ்பெற்ற தேயிலை தோட்டங்கள், காசிகரங்கா தேசிய பூங்கா ஆகியவை அசாம் மாநிலத்தில்தான் அமைந்துள்ளன.

அசாமின் காசிகரங்கா தேசிய பூங்காதான் அருகி வரும் காண்டாமிருகங்களின் சரணாலயமாக விளங்குகிறது.

அசாம் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் கிடைப்பது நிச்சயம் என்றும் நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்துள்ளது.