செய்திப்பிரிவு
‘விடுதலை’ பட நாயகி பவானி ஸ்ரீ பகிர்ந்தவை...
“ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடம் இருந்து போன் “ஒரு சின்ன ரோல் இருக்கு... பண்ண விருப்பம் இருக்கா?” என்றார்.
“நான் ஆடிப் போய்விட்டேன். எவ்வளவு முக்கியமான இயக்குநர்! சின்ன கேரக்டர்களைக் கூட எவ்வளவு ஸ்ட்ராங்காக எழுதிவிடுவார்.”
“அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருடைய அலுவலகத்தில் இருந்தேன்.”
“உங்க கேரக்டர் பற்றி இப்போ சொல்ல மாட்டேன். நீங்கள் ஸ்பாட்டுக்கு வாங்க... எந்தத் தயாரிப்பும் இல்லாம வரணும். அப்பத்தான் சரியாக இருக்கும் என்றார்.”
“அதன்பிறகு ஸ்பாட்டில் அவர் காட்சியையும், அதில் என்னிடம் எதிர்பார்ப்பதையும் விளக்கிச் சொல்வார் வெற்றிமாறன்.”
“ஒரு மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் தமிழரசி என்பவள் இயலாமை, மன வலிமை இரண்டுமே உள்ள ஒரு கதாபாத்திரம்.”
“போலீஸ் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா என்று சித்திரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு எண்ணினேன்.”
“விடுதலை பாகம் 1-ல் கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்” என்றார் பவானி ஸ்ரீ.
‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் பவானி ஸ்ரீ.