செய்திப்பிரிவு
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் முதல் 4 நாட்களில் இந்திய அளவில் ரூ.11.5 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.
அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மினாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ முதல் 7 நாட்களில் இந்திய அளவில் ரூ.122 கோடி வசூல்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம் முதல் 12 நாட்களில் இந்திய அளவில் ரூ.126 கோடி ஈட்டியுள்ளது.
பாலகிருஷ்ணா, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்த ‘டாக்கு மகாராஜா’ முதல் 9 நாட்களில் இந்திய அளவில் ரூ.80 கோடி வசூலித்துள்ள்ளது.
அஜய் தேவ்கனின் புதிய படமான ‘ஆசாத்’ வெளியான 4 நாட்களில் இந்திய அளவில் ரூ.5.5 கோடி வசூலித்துள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான 47 நாட்களில் இந்திய அளவில் ரூ.1,229 கோடி வசூல் செய்துள்ளது.
சோனு சூட் நடித்துள்ள ‘ஃபெட்டா’ வெளியான 11 நாட்களில் இந்திய அளவில் ரூ.13 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.
சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த ‘மதகஜராஜா’ வெளியான 9 நாட்களில் இந்திய அளவில் ரூ.39 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.