உன் சிரிப்பினில்... ஸ்ரீலீலா பளீச் க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

2019-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீலீலா.

2021-ல் வெளியான ‘பெல்லி சண்டாடி’ தெலுங்கு படத்தில் நடித்தார்.

2022-ல் வெளியான ‘ஜேம்ஸ்’ கன்னட படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

அதே ஆண்டு வெளியான ரவிதேஜாவின் ‘தமாகா’ படத்தின் பாடல் ஒன்றில் அவர் ஆடிய நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அடுத்து பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தில் நடித்தார்.

மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் ‘குர்சி மாடதாபெட்டி’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் வைரலானது.

தற்போது வெளியாகி வசூலை குவித்து வரும்‘புஷ்பா 2’படத்தில் சிறப்பு நடனமாடியிருக்கிறார் ஸ்ரீலீலா.