பாவனை ஆயிரம்... நந்திதா ‘ஸ்வீட்’ க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

‘நந்தா லவ் நந்திதா’ என்ற தன் பெயரைக் கொண்ட கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் நந்திதா.  

2012-ல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

‘எதிர் நீச்சல்’, ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றார். 

அண்மையில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ‘ரணம் அறம் தவறேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

அவ்வப்போது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நந்திதாவின் ஈர்க்கும் முகபாவனைகளை கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.