செய்திப்பிரிவு
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.