பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு பஞ்ச மூர்த்திகளும் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தனர். விழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்பட்டது. மாலையில் மகா தீபத்தை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.