ஆன்மிகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம்

Rathish.R

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ​திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் தீபத் திரு​விழா​ நிறை​வாக 2,668 அடி உயர​முள்ள மலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் மகாதீபத்தை தரிசனம் செய்​தனர்.

நினைத்​தாலே முக்தி தரும் திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் மிக​வும் பிரசித்தி பெற்ற விழா​வான கார்த்​திகை தீபத் திரு​விழா மிக சிறப்​பாக கொண்​டாடப்​படு​கிறது. ‘தான்’ என்ற அகந்​தையை அழிக்க சிவபெரு​மான் திரு​வண்​ணா​மலை​யில் அடி​முடி காண முடி​யாத அக்​னிப் பிழம்​பாக காட்​சி​யளித்​தார். அந்த நாளே திரு​வண்​ணா​மலை​யில் கார்த்​திகை தீபத் திரு​விழா​வாக ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​படு​கிறது .

அதன்​படி, இந்​தாண்டு கடந்த நவ.24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் கார்த்​திகை தீபத் திரு​விழா​வின் 10 நாள் உற்​சவம் ஆரம்​ப​மானது. விழா​வின் 10-ம் நாள் உற்​சவம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. அண்​ணா​மலை​யார் சந்​நி​தி​யில் உள்ள அர்த்த மண்​டபத்​தில் அதி​காலை 4 மணிக்கு ஏகன் அநேகன் தத்​து​வத்தை உலகுக்கு எடுத்​துரைத்து பஞ்ச பூதங்களும் நானே என்​பதை இறைவன் உணர்த்​தும் பரணி தீபத்தை சிவாச்​சா​ரி​யார்​கள் ஏற்​றினர். பின்​னர், பரணி தீப​மானது அம்​மன் சந்​நி​தி, விநாயகர் சந்​நிதி உள்​ளிட்ட அனைத்து சந்​நி​தி​களுக்​கும் கொண்டு செல்​லப்​பட்டு தீபம் ஏற்​றப்​பட்​டது. இதில், ஏராள​மான பக்​தர்​கள் மழையை​யும் பொருட்​படுத்​தாமல் திரண்டு தரிசனம் செய்​தனர்.

மாலை மகாதீப பெரு​விழா நடை​பெற்​றது. மாலை 4 மணி முதல் அண்​ணா​மலை​யார் கோயில் 3-ம் பிர​காரத்​தில் உள்ள கொடிமரம் முன்பு உள்ள தீப​தரிசன மண்​டபத்​தில் பஞ்ச மூர்த்​தி​களான விநாயகர், வள்​ளி, தெய்​வானை சமேத முரு​கர், உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார், பராசக்தி அம்​மன், சண்​டிகேஸ்​வரர் ஆகியோர் சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளினர். பின்​னர் ஆண் - பெண் சமம் என்ற தத்​து​வத்தை உலகுக்கு உணர்த்த உமை​யாளுக்கு தனது இடபாகத்தை வழங்​கிய அண்​ணா​மலை​யார் “அர்த்​த​நாரீஸ்​வரர்” ஆக ஆனந்த தாண்​ட​வத்​துடன் மாலை 5.55 மணி​யள​வில் தங்க கொடிமரம் முன்பு எழுந்​தருளி​னார்.

ஆண்​டுக்கு ஒரு முறை மகா தீபத்​தன்று மட்​டுமே சில நிமிடங்​கள் காட்சி தரும் அர்த்​த​நாரீஸ்​வரர் காட்​சியை தரிசித்த பக்​தர்​கள், அண்​ணா​மலை​யாருக்கு அரோகரா என பக்தி பரவசத்​துடன் முழக்​கமிட்​டனர். அப்​போது, கொடி மரம் அருகே உள்ள அகண்ட தீபம் ஏற்​றப்​பட்​டதும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்​சி​யில் பரு​வத​ராஜ குல வம்​சத்​தினர் மகா தீபம் ஏற்​றினர். மகா தீபம் ஏற்​றப்​பட்​டதும், கோயி​லின் நவ கோபுரங்​கள் மற்​றும் வளாகங்​களில் மின்​விளக்கு அலங்​காரம் ஜொலித்​தது. மேலும், கோயில், வீடு​களில் அகல் விளக்கு ஏற்றி பக்​தர்​கள் வழிபட்​டனர். மலை மீது மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்​டர் திரி பயன்​படுத்​தப்​பட்​டது. மலை மீது ஏற்​றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்​கள் பக்​தர்​களுக்கு காட்​சி​யளிக்​கும்.

SCROLL FOR NEXT