அரசியல்

தவெகவுக்கு கைகொடுக்குமா செங்கோட்டையனின் ‘ஹலோ’ ப்ளான்?

செய்திப்பிரிவு

அ​தி​முக​வில் இருந்து தவெக​வுக்கு சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கட்​சி​யின் நிர்​வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர் ஆகிய 4 மாவட்​டங்​களின் அமைப்பு செயலா​ளர் பொறுப்பு வகித்து வரு​கி​றார். அவர் அதிமுகவில் அதிருப்​தி​யில் உள்ள முன்​னாள் எம்எல்ஏக்களை இழுக்​கும் முயற்​சி​யில் தீவிர​மாக களம் இறங்​கி​யுள்​ளார்.

குறிப்​பாக அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனி​சாமி​யின் கோட்​டை​யாக கருதப்​படும் சேலம், நாமக்​கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்​களை உள்​ளடக்​கிய கொங்கு மண்​டலத்​தைச் சேர்ந்த அதி​முக முன்​னாள் எம்எல்ஏக்களுக்கு செங்​கோட்​டையன் நேரடி​யாக ஃபோனில் தொடர்​பு​கொண்டு பேசி வரு​கி​றார்.

இதுகுறித்து அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் கூறுகையில், “அதி​முக​வில் பழனி​சாமி​யால் ஓரங்கட்டப்பட்ட மற்​றும் அவரின் தலை​மையை ஏற்க விரும்​பாத முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள், மாவட்ட, நகர நிர்​வாகி​கள் பலர் உள்​ளனர். இந்த அதிருப்தியாளர்களுக்கு வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கப்​ப​டாது. அவ்​வாறு ஓரம் கட்​டப்​பட்ட முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள் மற்றும் கட்சி நிர்​வாகி​களை செங்​கோட்​டையன் நேரடியாக செல்​போனில் அழைத்​துப் பேசுகி​றார். அவரிடம் தேர்​தல் செல​வுக்கு பணம் எது​வும் இல்லை என்று கூறி​னாலும் ‘என்னை நம்பி வாங்க’ என தெரிவிக்கிறார்.

எம்​ஜிஆர் மன்ற செய​லா​ள​ரு​மான பல்​பாக்கி கிருஷ்ணன், செங்​கோட்​டையன் முன்​னிலை​யில் தவெக​வில் இணைந்துள்​ளார். இது​போல் பலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்​கப்​பட்டு வரு​கிறது.

யார் யார் எல்​லாம் தவெக​வுக்கு தாவ உள்​ளனர் என்​பது வரும் நாட்​களில் தெரிய​வ​ரும். திமுக உள்​ளிட்ட பிற கட்சியினரை செங்கோட்​டையன் தொடர்பு கொள்​வது கிடை​யாது. செங்​கோட்​டையனை வைத்து அதி​முகவை, பாஜக பலவீனப்​படுத்தி வரு​கிறது. இதை பழனி​சாமி​யும் நன்கு அறி​வார். ஆனால் மயான அமைதி காத்து வருகிறார்” என்​றார் அந்த அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ​.

இதனிடையே, தமிழகம் முழு​வதும் தவெக நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். சில நாட்​களுக்கு முன்பு தூத்​துக்​குடி மாவட்​டச் செய​லா​ளர் பதவி கிடைக்​காத விரக்​தி​யில் நிர்​வாகி அஜிதா விஜய் காரை முற்றுகையிட்டுப் போராட்​டம் நடத்​தி​யதுடன், தற்கொலைக்​கும் முயன்​றார்.

இந்​நிலை​யில், திருப்​பூர் மாவட்​டம் வெள்​ளகோ​விலில் தவெக அலு​வல​கம் திறப்பு விழா நடை​பெற்​றது. கட்​சி​யின் நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்டையன் அலு​வல​கத்தை திறந்​து​வைக்க வந்​த​போது, கட்​சி​யினர் சிலர் அவரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். வெள்​ளகோ​வில் பகு​திக்கு ஈரோடு, தாராபுரத்​தைச் சேர்ந்​தவர்​களை நிர்​வாகி​களாக நியமித்​த​தாக​வும், கட்சி மற்​றும் விஜய் மக்​கள் இயக்கத்தில் பல ஆண்​டு​களாகப் பணியாற்றியவர்களுக்கு, பதவி வழங்​கக் கோரி​யும் இந்தப் போராட்​டம் நடை​பெற்​றது.

செங்​கோட்​டையன் காரை செல்ல விடா​மல் தடுத்த கட்சியினர், அவருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் அதிர்ச்​சி​யடைந்த செங்​கோட்​டையன் “அனை​வரும் கோபிசெட்​டி​பாளை​யத்​தில் உள்ள அலு​வல​கத்​துக்கு வாருங்​கள். அங்கு பேசி, பிரச்​சினைக்​குத் தீர்​வு​காண்போம்” என்று கூறி​விட்​டு, அங்​கிருந்து சென்​றார். இந்நிலை​யில், செங்​கோட்​டையனை தவெக நிர்​வாகி​கள் முற்​றுகை​யிடும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​வதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT